Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உலகம் முழுக்க கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்

உலகம் முழுக்க கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்

By: Karunakaran Fri, 20 Nov 2020 2:01:04 PM

உலகம் முழுக்க கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்

பெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள். இன்னொரு வகை ஆத்திரக்காரர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க! நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்துவார்கள்.

இப்படி பேசும் ஆண்கள் பெரும்பாலும் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்களால் இயக்கிச்செல்லப்படும் கார்களை ‘ஓவர் டேக்’ செய்வது, சிக்னலே போடாமல் வண்டியைத் திருப்புவது, திடீரென்று அதிர்ச்சியான சத்தத்தை எழுப்பி அவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். அவை அனைத்தும் சட்டவிரோதமானவை. இது பெண்களை தடுமாறச் செய்து அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். கார் ஓட்டும்போது மெல்லிய இசையைக் கேட்பது நல்லதுதான். அளவுக்கதிகமான சத்தத்தில் இசையை ஒலிக்கவைத்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது போக்குவரத்தை பாதிக்கச் செய்யும் செயல்.

men,women,driving,world ,ஆண்கள், பெண்கள், ஓட்டுநர், உலகம்

உலகம் முழுக்க பெண்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே கார் ஓட்டும் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படவும் செய்கிறார்கள். ஜேக் பரூத் என்பவர் வாகனத்துறை சார்ந்த பத்திரிகையாளர். அமெரிக்காவை சேர்ந்த இவர் வாகன ஆராய்ச்சியாளராகவும் செயல்படுபவர். ஜேக் பரூத் நடுத்தர வயது ஆண். இவர் கள ஆய்வுக்காக தன்னை பெண்போன்று மாற்றிக்கொண்டார். பெண்ணாக தோன்றினால்தான் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை உணரமுடியும் என்று அவர் கருதினார்.

பெண் தோற்றத்திலேயே காரை ஓட்டிக்கொண்டு சாலைகளில் வலம் வந்தபோது அவரை பெண்ணாக நினைத்துக்கொண்டு பல ஆண்கள் சேட்டை செய்திருக்கிறார்கள். இறுதியில் அவர் ஆண் என்பது தெரிந்ததும் அதிர்ந்து போய் நழுவிச்சென்றிருக்கிறார்கள். பெண் தோற்றத்தில் இருந்ததால் ஜேக்கிற்கு கசப்பான அனுபவங்கள் நிறைய கிடைத்திருக்கின்றன. அவரை வெறுப்பேற்றும் விதமாக சாலை விதிகளை மீறி நடந்துகொண்டிருக்கிறார்கள். ‘உண்மையை சொன்னால், ஆண்களைவிட பெண்களே சிறப்பாக கார் ஓட்டுகிறார்கள். அந்த பொறாமையால்தான் ஆண்கள், கார் ஓட்டும் பெண்களை கேலிசெய்கிறார்கள்.

Tags :
|
|