Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இன்றைய நீர் தேவை மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நன்மை

இன்றைய நீர் தேவை மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நன்மை

By: Dinesh Wed, 05 Aug 2020 5:15:23 PM

இன்றைய நீர் தேவை மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நன்மை

சென்னை: கழிவு நீரால் ஏற்படும் உடல்நலம் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு முழுமையாக இன்னும் ஏற்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஒரு மனிதன் நீரின்றி 3 அல்லது 5 நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. இந்த பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவீதம் மட்டுமே உள்ளது. மீதமிருக்கும் 70 சதவீதமும் நீர்ப்பரப்பாக இருந்தாலும், அதில் 97.5 உப்பு நீர்தான். இதில் நிலத்தடிநீர் 2.5 சதவீதம் தான். மீதம் 0.26 சதவீதம் நன்னீர் பரப்பாகும். இந்த நீரைத்தான் உலகில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம். இதை ஆய்வுகள் தெளிவாக விளக்குகின்றன.

water,waste water,environmental care,environment,ground water,sewage water ,நீர், கழிவு நீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், கழிவுநீர்

கழிவுநீரின் பாதிப்புகள்

இப்படிப்பட்ட சூழலில் மக்கள் தொகை பெருக்கத்தால் நாளுக்குநாள் நிலத்தடி நீரானது பெருமளவில் உறிஞ்சப்படுகிறது. இதனால் கடல் நீர் உட்புகுந்து நல்ல நீரை உபயோகிக்க இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் உலக மக்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது ஒரு புறமிருக்க தொழிற்சாலை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மக்கள் பயன்படுத்தும் நச்சுப்பொருட்கள் என்று பல்வேறு வழிகளில் நீரின் தூய்மை வெகுவாக கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீரின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை கிளப்புகின்றன.
இதில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளது என்ற தகவல் கழிவு நீர் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததுதான் என்பதுதான் உண்மை. இந்த வகையில் தமிழகத்தில் 90 சதவீத நீர் நிலைகள் மாசடைந்து காணப்படுகின்றன. இந்த நீர்நிலைகளில் கழிவுநீர், சாயக்கழிவுநீர், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், அதிகளவில் கலக்கிறது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இந்த நீர்நிலைகளின் தண்ணீர் உபயோகமற்றதாகி விடும்.

water,waste water,environmental care,environment,ground water,sewage water ,நீர், கழிவு நீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், கழிவுநீர்

விதிமுறைகள் மீறல்

கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளியேற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு தங்களின் செயல்களை தொடர்ந்து செய்து வரும் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மிகவும் மாசடைகிறது. ஆனால் கழிவு நீரை சுத்திகரிப்பதால் தங்களின் தலைமுறைகளை காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் மறந்து விடுகின்றனர். நிலத்தடி நீர் மட்டுமின்றி கழிவு நீரால் ஏற்படும் நோய்கள் பணக்காரர்கள், ஏழைகள் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. கழிவு நீரை சுத்திகரிக்காமல் பின்னர் அதற்காக பல வழிகளில் பணத்தை செலவு செய்து சரிகட்டும் நிலைக்கு பதிலாக ஆரம்பத்திலேயே சுத்திகரிப்பு என்ற விஷயத்தை கவனத்தில் கொண்டால் செலவுகள் மிகவும் குறைவு.
இது மக்களுக்கு செய்யும் உதவியாகவும் இருக்கும். நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீரை விட்டு அந்த ஆற்றையே மாசுபடுத்திய செயலுக்காக திருப்பூரைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்தது. காரணம் தொழில் வளர்ச்சி என்பதை நினைத்து மக்களின் வாழ்வாதாரமான குடிநீரை மாசடைய செய்ததால். இயற்கையை மாசுபடுத்தியவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். நாட்டின் சுற்றுச்சூழல் சட்டங்களை நிலை நிறுத்த வேண்டியது அவசியம்.

water,waste water,environmental care,environment,ground water,sewage water ,நீர், கழிவு நீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், கழிவுநீர்

தொழில் பாதிப்பு

திருப்பூர் தொழில் சூழல், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கிறது. நாட்டுக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. அதேசமயம், ஒரு ஆற்றையே சாயப்பட்டறை நிறுவனங்கள் மாசுபடுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் திருப்பூரின் நிலையே மாறி போய் விட்டது. குடிக்கும் குடிநீரையும் விலை கொடுத்து வாங்கும் நிலை. இதற்கு காரணம் கழிவு நீரை சுத்திகரிக்காமல் போனதால். இப்படி குறைந்த செலவு செய்யாமல் அபராதம் என்ற பெயரில் மிகப்பெரிய விலையை கொடுக்கும் நிலை.

உலகின் அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழிலாகவும், அதிக தொழில்வாய்ப்பை உருவாக்கின்ற 6ஒரு துறையாகவும் கைத்தொழில்துறை உள்ளது. ஆனால் கைத்தொழில்துறையில் பல்வேறு விதத்தில் வெளியேறும் கழிவுகள் நீர்நிலைகளில் சேர்க்கப்படுவதனால் நீர் நிலைகள் மாசடைகிறது. முக்கியமாக மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகளவில் நகரமயமாக்கல் காரணமாகவும் கழிவுகள் நீரில் கலக்கின்றன. குறிப்பாக நகரப்பகுதிகளில், இடவசதிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

கழிவு நீரை சுத்திகரிக்கலாம்

இதனால் தமது வீடுகளில் சேரும் கழிவுகளை நீர் நிலைகளில் வீசிவிடுகின்றனர். மேலும் நகரப்பகுதிகளில், இருந்து மிதமிஞ்சிய அளவில் சாக்கடைகளுக்கூடாகப் போய்ச் சேரும் மாசுக்களாலும் நீர் மாசடைகின்றது. கழிவு நீரை சுத்திகரித்தால் இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆனால் இதுகுறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் கட்டாயம் ஏற்பட வேண்டும். உலகம் முழுவதும் மாசுகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில், அவர்களில் 25 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கழிவு நீர் மறு சுழற்சி

கழிவு நீரால் ஏற்படும் மாசுக்கள், காற்றின் மாசுக்கள் என்று அனைத்தும் மக்களின் உயிருக்கு உலை வைக்கின்றன. கழிவு நீர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றால் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும் மிகவும் அதிகளவில் பாதிப்பை சந்திக்கிறது. நாம் தண்ணீரைப் பல வழிகளில் பழித்துக் கொண்டதால், அதனை விலைக்கு வாங்கிக் குடித்து பலவகையான நோய்களையும் வரவழைத்துக் கொண்டு இருக்கிறோம். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதுமே மக்கள் தண்ணீருக்காக திண்டாடும் சூழலே நிலவி வருகிறது. முறையாக மழைநீரை சேமித்தும் வீட்டிலிருந்து வெளியேறும் நீரை முறையாக மறு சுழற்சி செய்தாலே போதும் காலத்துக்கும் தண்ணீர் பஞ்சமே வராது.

விவசாயம் செழிக்கும்

இன்றைய சூழலில் நாம் பயன்படுத்தும் தண்ணீரில் 90-100% வரையில் வீணாகதான் போகிறது. வீட்டில் தினமும் குளிக்கவும் துவைக்கவும் சமையலறைக்கும் நாம் பயன்படுத்தும் நீரை முறையாக சுத்திகரித்தாலே போதும். தண்ணீருக்காகப் போராடத் தேவையே ஏற்படாது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் கழிவுநீரால் ஏற்படும் வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இனியும் கழிவுநீரால் வேதனைப்பட வேண்டாம். அதை சுத்திகரிப்பதால் ஏற்படும் நன்மைகள், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவது, விவசாயம் செழிப்பது, நோய்கள் குறைவது, தொழில் முன்னேற்றம் போன்றவை ஏற்படும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருங்கிணைவோம்... கழிவு நீர் பாதிப்புகளை உணர்வோம்... விழிப்புணர்வு பெறுவோம். நாம் உயர்ந்து நாட்டையும் உயர்த்துவோம்.
மேலும் தண்ணீரை பற்றி விழிப்புணர்வு பெற : 98407 00537 , 95516 67001

Tags :
|