Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பிஸ்கெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு எந்தெந்த பிரச்சனைகள் வரும்

பிஸ்கெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு எந்தெந்த பிரச்சனைகள் வரும்

By: Karunakaran Mon, 28 Sept 2020 4:01:32 PM

பிஸ்கெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு எந்தெந்த பிரச்சனைகள் வரும்

சாப்பாடு என்றாலே குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று சொல்லும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு “அந்த பிஸ்கெட் என்றால் உயிர், இந்த பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள்” என்பதை சொல்லுவர். குழந்தையில் இருந்தே இணை உணவாக பிஸ்கெட் கொடுத்து பழகினால் அந்த குழந்தைகள் உணவை எடுத்துக் கொள்ளாது என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். இதன் மூலம் பிள்ளையின் பசிபோகும் என நினைக்கிறார்கள். ஆனால், தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என டயட்டீசியன்கள் கூறுகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

children,biscuits,wheat,food ,குழந்தைகள், பிஸ்கட், கோதுமை, உணவு

பிஸ்கட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகமாக சுத்திகரிக்கப்பட்டவை.பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் ஆகும்.

சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டு பிஸ்கெட்தானே என்று நினைக்கும் தாய்மார்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவை அளிக்கிறோம் என நினைத்துக் கொண்டால் நல்லது. பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Tags :
|