Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உலக நண்பர்கள் தினம் முதன் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது??

உலக நண்பர்கள் தினம் முதன் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது??

By: Monisha Thu, 30 July 2020 11:43:54 AM

உலக நண்பர்கள் தினம் முதன் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது??

ஒவ்வொரு நாட்டிலும் இந்த நண்பர்கள் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக ஓஹியோவில் ஏப்ரல் 8ம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகளின் சபை ஜூலை 30ஐ நண்பர்கள் தினம் என்று அறிவித்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக நண்பர்கள் தினம் முதன் முதலில் 1958ல் கொண்டாடுவதற்காக கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு முன்பு நண்பர்கள் தினத்தினை உருவாக்கியவர் ஜாய்ஸ் ஹால் என்பவராவார். ஆனால் இதற்கு இடைப்பட்ட காலங்களில் கூட வாழ்த்து அட்டைகள் எல்லாம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

world friends day,friends,friendship,history,greetings ,உலக நண்பர்கள் தினம்,நண்பர்கள்,நட்பு,வரலாறு,வாழ்த்து

அமெரிக்காவில் நண்பர்கள் தினம் நல்ல வரவேற்பினைப் பெற்ற பின்பு அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த கோஃபி அன்னன் அவர்களின் மனைவி நானே அன்னன் நண்பர்கள் தினம் பற்றிய முறையான அறிவிப்பினை வெளியிட்டார்.

ஜூலை 20 தேதியில் பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. இந்தியா, நேபாளம், தென்னமெரிக்க நாடுகளில் இந்நாள் வாழ்த்து அட்டைகள், அன்பளிப்புகள், மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து கொண்டாடப்படுகிறது.

world friends day,friends,friendship,history,greetings ,உலக நண்பர்கள் தினம்,நண்பர்கள்,நட்பு,வரலாறு,வாழ்த்து

நட்பு என்பது அறியாத வயதில் பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம் மற்றும் வெளி உலகம் முதல் தற்போது சோஷியல் மீடியாக்கள் வரை வளர்ந்து வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி நட்பு அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவம் தான். வெகு நாட்கள் கழித்து பள்ளி நட்பை சந்திக்கப் போறோம் என்றால் அதை விட மகிழ்ச்சி ஏதுமில்லை. அறியாத வயதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளும், சேட்டைகளும் விலைமதிப்பு அற்றது. இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் விளையாட்டுகளும் சேட்டைகளும் மறைந்து விட்டன. ஆனால், இதுயெல்லாம் நாம் தலைமுறைக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷ வரலாறு ஆகும்.

Tags :