Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • கணவன் மனைவி உறவுக்குள் இந்த 3 குணாதிசயங்கள் இருந்தால் போதுமாம்

கணவன் மனைவி உறவுக்குள் இந்த 3 குணாதிசயங்கள் இருந்தால் போதுமாம்

By: vaithegi Tue, 19 Sept 2023 3:08:02 PM

கணவன் மனைவி உறவுக்குள் இந்த 3 குணாதிசயங்கள் இருந்தால் போதுமாம்

இந்த 3 குணாதிசயங்கள் இருந்தால் சண்டையே வராது ...சண்டைகள், மோதல் என எல்லாவற்றிற்கு காரணம் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாதது தான். கணவன் – மனைவி உறவின் அடிப்படை அம்சம் அன்பு. கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆழமான அன்பை கொண்டிருக்க வேண்டும்.

கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, கடினமான காலகட்டங்களில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவதுடன் வாழ வேண்டும். தற்போது இந்த பதிவில் கணவன் மனைவி இருவருக்கும் இருக்க வேண்டிய 3 முக்கியமான குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்.

கணவன் – மனைவி உறவுக்குள் சண்டைகள் வருவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அந்த சண்டைகள் நீடிப்பது மிகவும் தவறு. எனவே இருவருமே எப்படிப்பட்ட சண்டை வந்தாலும், அன்று இரவு தூங்க செல்வதற்கு முன், அந்த சண்டைகளை மறந்து மகிழ்ச்சியுடன் சமாதானத்துடன் செல்ல வேண்டும் என முடிவெடுக்க வேண்டும்.

husband. wife , கணவன். மனைவி

கணவன் – மனைவி இருவருமே, ஒருவருக்கொருவர் என்ன பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருந்து, அவ்வப்போது சர்ப்பரைஸ் கிப்ட் கொடுங்கள். இது ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலை வெளிப்படுத்துவதோடு, இருவருக்கும் இடையே மேலும் அன்பு அதிகரிக்க உதவும்.

அதேபோல் கணவன் மனைவி உறவுக்குள் வெளிப்படை தன்மை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில், எந்த விஷயமாக இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்க கூடாது. மேலும் அது செல்போன் பாஸ்வேதாக இருந்தாலும் சரி, மற்ற எந்த விஷயமாக இருந்தாலும், ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தால், இருவருக்கும் இடையே சந்தேகம் வராது. சமாதானம், சந்தோசம் நிலைத்திருக்கும்.

Tags :