Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Mon, 11 July 2022 6:53:53 PM

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: குழந்தைகள் மழலை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தை, மழழை மொழியில் அழகாக பேசுவதை கேட்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவு கிடையாது. ஆனால் சிலர் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேசுவதில்லை. இவர்கள் மற்ற குழந்தைகளை காட்டிலும் சிறிது நாட்கள் கழித்து தான் பேசுவார்கள்.

இந்த சமயத்தில் தான் நமது குழந்தையை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு வருவீர்கள். குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை நாம் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரிடம் அல்லது பேச்சு சிகிச்சை தருபவரிடம் கூட்டிச் சென்று அதன் காரணங்களை கண்டறிய வேண்டியுள்ளது. மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை பேச வைக்க முடியும்.

children,talking,mom,dad,grandma,grandpa,best way ,குழந்தைகள், பேசுதல், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, சிறந்த வழி

உங்கள் குழந்தைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிறிது முயற்சி செய்தால் போதும் அவர்களை பேச வைத்திட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. உங்கள் குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டும். இதுவே நீங்கள் பெருமளவில் முயற்சி செய்யாமல் அவர்களை பேச வைத்திட சிறந்த வழியாகும். மற்ற குழந்தைகளுடனும் விளையாட விடும் போது பேச்சு தானாக நிச்சயம் வரும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் உங்களுடைய முயற்சிகள் இல்லாமலேயே அவர்கள் பேசத் தொடங்குவார்கள்.

எப்போதும் வேலை வேலை என்று இருந்தால் குழந்தைகளை பேச வைக்க வெகு நாட்களாகி விடும். குழந்தைகளுடன் பேசும் போது தான் அவர்களும் பேச கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு என்ன புரியப் போகின்றது என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நீங்கள் சும்மாவாவது அவர்களிடம் பேசும் போது, அவர்கள் அதற்கு பதில் அளிக்கத் தொடங்குவார்கள்.

உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவது நல்ல யோசனையாகும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற அழைக்கும் சொற்களையும் எப்போதும் கூறி கொண்டு அவர்களையும் சொல்ல வையுங்கள். நீங்கள் கேட்பது அவர்களுக்கு விரைவாக புரிந்து விடும். இதுவே உங்கள் குழந்தையை பேச வைக்க சிறந்த வழியாகும்.

Tags :
|
|