உலக காவல்துறை ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்ற சென்னை பெண் காவலர்
By: Nagaraj Tue, 08 Aug 2023 8:01:20 PM
சென்னை: கனடாவில் நடந்த உலக காவல்துறை ஹெப்டத்லான் போட்டியில் தங்க பதக்கம் வென்று சென்னை பெண் சாதனை படைத்துள்ளார்.
உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள் கனடாவில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை நடந்தது. சென்னை காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் காவலர் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் ஏட்டு லீலாஸ்ரீ ‘ஹெப்டத்லான்’ போட்டியில் பங்கேற்றார்.
7 விளையாட்டுப் பிரிவுகளில் (100மீ தடை, உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800மீ ஓட்டம்). தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
இந்திய, தமிழக மற்றும் சென்னை காவல்துறைக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது. வரும் 14-ந் தேதி சென்னை திரும்பும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.