Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • பெண்களை விட ஆண்கள் மூளை முதிர்ச்சியடைய அதிக காலம் எடுக்கும்!

பெண்களை விட ஆண்கள் மூளை முதிர்ச்சியடைய அதிக காலம் எடுக்கும்!

By: Monisha Mon, 30 Nov 2020 3:46:55 PM

பெண்களை விட ஆண்கள் மூளை முதிர்ச்சியடைய அதிக காலம் எடுக்கும்!

சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று 40 வயது வரை உள்ள ஆண்களின் செயல்திறன் பெண்களின் செயல்திறனை விட குறைவாக இருக்கும் என கண்டுபிடித்துள்ளது. ஆண்கள் பெரியவர்களாக இருந்தாலும் குழந்தைகளைப் போல தொடர்ந்து நடந்து கொள்கிறார்கள் என்பதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருபீர்கள்.

பல இடங்களில் அம்மா, மனைவி, சகோதரி, பொறுப்பில் இருக்கும் பெண்கள் என பல இடங்களில் சிக்கலான விஷயங்களை பொறுப்புடன் அந்த நேரம் மற்றும் வரும் காலங்களில் பிரச்னை ஏற்படாமல் அணுகுவார்கள் பெண்கள். கணவன் மனைவி உறவுகளில், பொதுவாக முதிர்ச்சி மற்றும் பொறுப்பை அதிகம் கொண்டவர்கள் பெண்கள் என்று பலரும் நம்புகிறார்கள். இதை நிரூபிக்கும் விதத்தில் இந்த ஆய்வு அமைந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான முதிர்ச்சி, பிரச்சனைகளை அணுகுதல் மற்றும் வளர்ச்சியின் வேறுபாடுகளை ஆய்வு செய்தனர்.

women,maturity,men,oxford,university ,பெண்கள்,முதிர்ச்சி,ஆண்கள்,ஆக்ஸ்போர்டு,பல்கலைக்கழகம்

கிடைத்த முடிவுகளை ஒப்பிட்டு வேறுபாடுகள் குறித்து அவர்களால் சிறந்த முடிவுகளை எடுக்க முடிந்தது. மூளையின் முதிர்ச்சி என்பது முதிர்வயது வரை விரிவடையும் செயல்பாடு மற்றும் கட்டமைப்பு பிரிவுகளின் நீண்டகால வளர்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

இதில் ஆண்கள் மூளை முதிர்ச்சியடைய அதிக காலம் எடுக்கிறது என தெரியவந்துள்ளது. மூளையின் முதிர்வு செயல்பாட்டின் போது எந்த செயல்பாடுகள் மாறுகின்றன என்ன விஷயங்கள் நிலையானதாக இருக்கிறது என்பதை கண்டறியும் நோக்கத்தில் இந்த ஆய்வு அமைந்தது.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் 4 முதல் 40 வயது வரையிலான 121 நபர்களின் மூளையை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் பாலினம் மற்றும் வயதை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது பல வேறுபாடுகளை கண்காணித்தனர்.

women,maturity,men,oxford,university ,பெண்கள்,முதிர்ச்சி,ஆண்கள்,ஆக்ஸ்போர்டு,பல்கலைக்கழகம்

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் மூளைகளும் அன்றாட வாழ்க்கையில் ஒரே திறனில் செயல்பட்டிருந்தாலும் ஆண்கள் பெரும்பாலும் நீண்டகால வளர்ச்சியில் சிறிது தாமதத்தை வெளிப் படுத்தியுள்ளார்கள். இந்த செயல்பாட்டு திறன்கள் பெண்களுடன் ஒப்பிடும்போது சுமார் 40 ஆண்டுகள் வரை ஆண்களுக்கு தாமதிக்கலாம் என தெரியவந்துள்ளது.

பெண்கள் கூர்மையானவர்கள் ஆனால் பெண்களை விட ஆண்கள் 40 வயதிற்கு பிறகு அதிகம் முதிர்ச்சியடைகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆண்கள் பெண்களை விட பெரிய மூளையை கொண்டிருந்தாலும், பெண்கள் பெரும்பாலும் சிறந்த செயல்திறனை கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் பல அம்சங்களில் கூர்மையாக இருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, இது ஹார்மோன் வேறுபாடுகள் என சொல்லப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த செயல்திறன் அதிகரிப்பது நாமும் பல இடங்களில் பார்க்கிறோம். ஏராளமான ஆண்கள் 40 வயதிற்கு பிறகே பல துறைகளில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது பலருக்கும் தெரிந்த ஒன்று.

Tags :
|
|
|