Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • திருமணத்தில் ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்?

திருமணத்தில் ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்?

By: Monisha Mon, 27 July 2020 1:14:42 PM

திருமணத்தில் ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்?

திருமணத்தின் போது ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பது தொடர்பான ஆய்வை பாரத் மேட்டரி மோனி நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:-

44 சதவிகித பெண்கள் தங்களின் வாழ்க்கை துணை தங்களை சமமாக நடத்த வேண்டும் என்றும் நன்றாக வேலையில் இருக்கு வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றனர். 90 சதவிகிதமான பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு எல்லா வேலைகளையும் சமமாக பிரித்து செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். அதில் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பில் ஆண்களின் சம பங்கு வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

86% சதவிகித பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணை தனது பெற்றோரை அவரின் பெற்றோர் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். 64 சதவிகித பெண்கள் தங்களது மத நம்பிக்கைகளை திருமணத்திற்கு பிறகு விட்டு கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

marriage,women,expectation,bharat matri moni,study ,திருமணம்,பெண்கள்,எதிர்பார்ப்பு, பாரத் மேட்டரி மோனி,ஆய்வு

35 சதவிகிதம் பெண்கள் தங்களது தனித்தன்மை வாய்ந்த திறமையை திருமணத்திற்கு பிறகு விட்டுக் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். 68 சதவிகித பெண்கள், கணவர்கள் தங்களை தினமும் அலுவகலகத்திற்கு கொண்டு விட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

மேலும் 54 சதவிகித பெண்கள் ஷாப்பிங் செல்லும் போது, கணவரும் உடன் வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை .

இந்த ஆய்வு மூலம் இளம் பெண்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு எங்களால் செயல்பட முடியும் என்று பாரத் மேட்டரி மோனி நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Tags :
|