Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • குழந்தைகளுக்கு எந்த வகையான நாய்களை பிடிக்கும் ?

குழந்தைகளுக்கு எந்த வகையான நாய்களை பிடிக்கும் ?

By: Karunakaran Mon, 09 Nov 2020 1:37:19 PM

குழந்தைகளுக்கு எந்த வகையான நாய்களை பிடிக்கும் ?

நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போன்று இருப்பதால், குழந்தைகளின் செல்லப்பிராணிகள் ஆகின்றன.

கோமண்டர் (Komondor) : இது ஒரு வகையான ஹங்கேரியன் ஷெபெர்டு நாய். இந்த நாய்க்கு அதிகமான ரோமங்கள் இருப்பதோடு, அவை சுருண்டு இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.

மால்தீஸ் (Maltese) : மொசுமொசுவென இருக்கும் குட்டி நாய். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த நாய். இந்த நாயிடம் அன்பை காட்டினால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு அது பாசம் வைக்கும்.

ஆப்கன் ஹவுண்ட் (Afghan Hound) : இந்த நாய் மிகவும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பதோடு, அழகான பட்டுப்போன்ற ரோமங் களைக் கொண்டது. இவை நன்கு வேகமாக ஓடக்கூடியவை மற்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவை.

dogs,children,friendly,love ,நாய்கள், குழந்தைகள், நட்பு, அன்பு

குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்கள் :
கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever) : இந்த நாய் குழந்தைகளுடன் குறும்பாக விளையாடக்கூடியது. இதன் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், அழகாக மொசுமொசுவென்று இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கோல்டன் ரிட்ரைவர் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

பூடில் (Poodle) : இந்த மொசுமொசு நாய், பொம்மை போன்று இருக்கும். இந்த நாய் பெண் குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருக்கும். நன்கு விளையாடுவதோடு, வீட்டில் எந்தவொரு பிரச்சினையையும் கொடுக்காது.

பொமரேனியன்(Pomeranian) : இந்தியாவில் பொதுவாக காணப்படும் நாய் இனங்களில் ஒன்று தான் பொமரேனியன். இந்த நாய் பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ஏற்றதாக இருக்கும். மேலும் இவை குழந்தைகளுடன் நன்கு விளையாடக்கூடியவை. மேலும் இதற்கு அதிகப்படியான பராமரிப்பும் தேவைப்படாது.

Tags :
|