ஜீன்ஸ் தேர்வு செய்வதற்கு முன்னதாக இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்!

பெரும்பாலானோர் இன்றைக்கு விரும்பி அணியும் உடையாக ஜீன்ஸ் உருவெடுத்துள்ளது. உங்களுக்கு ஏற்ற ஜீன்ஸை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஜீன்ஸ் தேர்வு செய்வதற்கு முன்னதாக உங்கள் உடலின் வடிவமைப்பு, உங்களது உயரமும் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

உடலின் மேற்பகுதி ஒல்லியாக வந்து இடுப்பு பகுதி, மற்றும் தொடை சற்றே அகலமாக இருந்தால் அது 'ஹவர்கிளாஸ் பாடி ஷேப்' மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒரே அளவில் இருந்தால் அது 'ரூலர் அல்லது ரெக்டாங்கில் ஷேப்' இடுப்புபகுதி மட்டும் அளவுக்கு அதிகம் அகலமாக இருந்தால் அது 'பியர் ஷேப்' மேற்பகுதியை விட கீழ்ப்பகுதி ஒடுக்கமாக இருந்தால் அது 'கோன் ஷேப்'.

பூட் கட் ஜீன்ஸ்: ஹவர் கிளாஸ் பாடி ஷேப் உடையவர்கள் இந்த வகையான ஜீன்ஸ் அணியலாம். இந்த வகை ஜீன்ஸ் ஒல்லியாக காட்டும்.

ஸ்ட்ரெயிட் கட் ஜீன்ஸ்: உங்கள் உடலின் வடிவத்தை சரியாக அடையாளம் காணமுடியவில்லையெனில் இந்த ஜீன்ஸ் பெஸ்ட் சாய்ஸ். உயரம் குறைவாக இருப்பவரக்ளும் இதனை அணியலாம். இந்த வகை ஜீன்ஸ் உங்களை உயரமாக காட்டும்.

லாங் ஜீன்ஸ்: ஹவர்கிளாஸ் ஷேப் மற்றும் பியர் ஷேப் உள்ளவர்கள் லாங் ஜீன்ஸ் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் உடலை ஒடுக்கமாக காட்டும்.

ஸ்கின்னி ஜீன்ஸ்: மார்பு பகுதியை விட இடுப்பு பகுதி அகலமாக தெரியும் உடல்வாகு கொண்டவர்கள் இந்த ஜீன்ஸ் அணியலாம்.

ஃப்ளார்ஸ்: இடுப்புப்பகுதி மட்டும் அகலமாக இருப்பவர்கள் இவ்வை ஜீன்ஸ் அணியலாம். இது ஒடுக்கமாக காட்டும்.

இன்சீம்ஸ்: ரூலர் ஷேப் இருப்பவர்களுக்கு இது கரெக்ட் சாய்ஸ். பேஷனாக தெரிவதுடன் உங்கள் உடலை எடுப்பாக காட்டும்.

ஹை ரைசஸ்: இடுப்புப்பகுதி மட்டும் குண்டாக இருப்பர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம்.