குறைந்து வரும் கொரோனா பாதிப்பு... மாவட்ட வாரியாக 14 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 1 ஆயிரத்து 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 311 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், நோய் தொற்றுக்கு நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 43
செங்கல்பட்டு - 885
சென்னை - 4,698
கோவை - 817
கடலூர் - 208
தர்மபுரி - 157
திண்டுக்கல் - 125
ஈரோடு - 458
கள்ளக்குறிச்சி - 98
காஞ்சிபுரம் - 489
கன்னியாகுமரி - 172
கரூர் - 270
கிருஷ்ணகிரி - 327
மதுரை - 307
நாகை - 296
நாமக்கல் - 379
நீலகிரி - 165
பெரம்பலூர் - 27
புதுக்கோட்டை - 150
ராமநாதபுரம் - 39
ராணிப்பேட்டை - 140
சேலம் - 672
சிவகங்கை - 104
தென்காசி - 66
தஞ்சாவூர் - 221
தேனி - 59
திருப்பத்தூர் - 95
திருவள்ளூர் - 711
திருவண்ணாமலை - 281
திருவாரூர் - 188
தூத்துக்குடி - 190
திருநெல்வேலி - 248
திருப்பூர் - 673
திருச்சி - 227
வேலூர் - 222
விழுப்புரம் - 176
விருதுநகர் - 78
விமானநிலைய கண்காணிப்பு - 9