ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி

இந்தியா: ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ... டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இதனை அடுத்து ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

மேலும், செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் சேவை வழங்கினால் ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், புற்று நோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும், செயற்கை ஜரிகைக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட இனி 5% ஆக குறைக்கப்படும் எனவும், கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜிஎஸ்டி வரி பாக்கி ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளார்.