தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு 2 வது சனிக்கிழமை விடுமுறை

2வது சனிக்கிழமை விடுமுறை... அரசு அலுவலகங்களுக்கு, இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளித்து, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, சனிக்கிழமையும் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில், இரண்டாவது சனிக்கிழமை, அரசு அலுவலகங்களுக்கு, விடுமுறை அளித்து, அன்றும் மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும், அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் வளாகம் முழுவதும், துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும்.

கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றி, தமிழகத்திலும், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், மாதத்தின், இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிப்பதுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இதனால் அனைவரின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.