அரசின் சிறப்பு பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 4.80 மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்


சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதையடுத்து தொடர் விடுமுறை காரணமாக தினசரி இயக்கப்படுகின்ற 2100 பேருந்துகளுடன் இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை கூடுதலாக சென்னையிலிருந்து 2265 சிறப்பு பேருந்துகளும் பெங்களூரு,

மேலும் கோயம்பத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு உள்ளன. சென்னை மக்களுக்காக கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் தொடர் விடுமுறையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 4.80 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று இரவு 12 மணிவரை சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு 8,003 பேருந்துகள் இயக்கப்பட்டன.