புதிதாக உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... வானிலை மையம் தகவல்

சென்னை: தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 16-ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16-ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.