குப்பையில் வீசப்படும் பொருட்களை சேகரித்து விற்று மாதம் ரூ.4 லட்சம் வருமானம் பார்க்கும் பெண்

அமெரிக்கா: அசத்தும் அமெரிக்கா பெண்... அமெரிக்காவில், குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்ட பொருட்களை விற்று மாதம் நான்கு லட்ச ரூபாய் வரை பெண் ஒருவர் சம்பாதித்து வருவது பலரை வியப்படைய செய்துள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள குவாக்கர்டவுனைச் சேர்ந்த வெரோனிகா டெய்லர் என்ற பெண், குப்பையில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் மட்டும் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

கடந்த ஆண்டு லிஸ் வில்சன் என்ற நண்பருடன் இணைந்து பகுதி நேரமாக தனது முயற்சியைத் தொடங்கிய வெரோனிகா, இதனை முழு நேரமாக மாற்றி பணம் சம்பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.