இதற்க்கு மேல் மின்கட்டணமா இனி ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்

சென்னை: அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், மின்வாரிய ஆணையம் முக்கிய நடவடிக்கை ... தமிழக மின்வாரியத்தில் இதற்கு முன்னதாக இருந்த பல குறைபாடுகளும் நீக்கம் செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மின்கட்டண வசூல் அலுவலகத்தில் தேவையற்ற பணம் கையாளுதல்களை தவிர்க்கும் வகையில்,

ரூ.5,000 க்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்கள் அனைவரும் நேரடியாக கவுன்டர்களில் வந்து கட்டணம் செலுத்தாமல், காசோலையாகவும், வரைவோலையாகவும், ஆன்லைன் முறையிலும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து தற்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலும் கிடைத்துள்ளது.

எனவே அதன்படி, 372 யூனிட் மின்பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.1000 க்கு மேல் இருக்கும் கட்டணங்களை எல்லாம் இனி ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். அவர்கள் நேரடி கவுண்டர்களில் கட்டணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.