பருவகால மாற்ற விளைவால் வருங்காலத்தில் வெப்பம் 3 மடங்கு உயர்ந்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்து உள்ளதாக ஆய்வு தகவல்

இந்தியா: ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெப்ப உமிழ்வுகள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக 70,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.

இதனை அடுத்து இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது காற்றில் உள்ள வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும் போது வெப்ப அலைகள் ஏற்படுகிறது.

தற்போதைய தகவலின் படி பருவகால மாற்ற விளைவால் வருங்காலத்தில் வெப்பம் 3 மடங்கு உயர்ந்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்து உள்ளதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் வரும் 2,100-ம் ஆண்டில் அமெரிக்காவின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் பெருமளவு வெப்ப அளவு மிக கடுமையாக இருக்கும்.

மேலும் தற்போது கோடை காலத்தில் நிகழும் இந்த வெப்ப அலை வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 முதல் 50 மடங்கு என்ற எண்ணிக்கையில் உயர கூடும் என வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பேராபத்தை விளைவிக்க கூடிய வெப்ப குறியீடு ஆனது 124 டிகிரி (51 டிகிரி செல்சியஸ்) என்ற அளவில் வருங்காலத்தில் பதிவாக கூடும் என ஆய்வின் தலைவர் ஹார்வர்டு கூறியுள்ளார்.

இந்த ஆய்வில் அவர் கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட வெப்ப நிகழ்வை அடிப்படையாக வைத்து வரும் 2050 மற்றும் 2100ம் ஆண்டு வரை ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்துள்ளனர். இந்த வெப்பநிலை உயர்வால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் உயரும் மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் . இதனை அடுத்து இது உயிரினங்கள் அழிவுக்கு வழிவகுக்கும்.