அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி பொதுக்குழுவை கூட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அத்துடன் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்தது .

எனவே இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். அதிமுக பொதுக்குழு தீர்மானம் , பொதுச்செயலாளர் தேர்தல் போன்றவற்றை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம் ,மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கில் 3- ம் நாளாக விசாரணை ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை (ஜூன் 8ம் தேதி ) அதாவது இன்று ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.