பாஜக அரசு ஊடகங்களை அச்சுறுத்தி சீன அத்துமீறல் குறித்து பொய் சொல்கிறது - ராகுல் காந்தி

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்சனை, அதனால் ஏற்பட்டு பொருளாதார பிரச்சனை,லடாக் பகுதியில் சீனாவுடன் மோதல் போன்ற பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக இவற்றை சமாளிக்க போராடி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பொய்களை நிறுவனமயமாக்கி விட்டது என்றுகருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பா.ஜனதா கொரோனா பிரச்சினையில், பரிசோதனைகளை குறைத்துக்கொண்டு, பலி எண்ணிக்கை குறித்து பொய் சொன்னதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ராகுல்காந்தி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை புதிய கணக்கீட்டு முறையை பயன்படுத்தி கணக்கிட்டு பாஜக பொய் சொன்னது. தற்போது, ஊடகங்களை அச்சுறுத்தி, சீன அத்துமீறல் குறித்து பொய் சொல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இப்படி பொய்களை நிறுவனமயமாக்கி விட்டது. விரைவில் இந்த மாயை அகலும். இந்தியா அதற்கான விலையை கொடுக்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சீனாவுடனான மோதல் குறித்து ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்ச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.