அசாமில் மீட்புப்பணியின் போது படகு கவிழ்ந்து விபத்து

அசாம்: அசாமில் தொடர் கனமழையால் சிக்கி தவித்தவர்களை மீட்கும் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

அசாமில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீட்பு பணியின் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஹோஜாய் மாவட்டத்தில் இருக்கும் இஸ்லாம்பூர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 24 பேரை மீட்டு ஒரு படகில் ஏற்றிச் சென்ற போது எதிர்ப்பாராத விதமாக அந்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.


இந்த விபத்தில் 3 குழந்தை காணாமல் போனதாக தெரிகிறது. மீதமுள்ளவர்களை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், காணமல் போன 3 குழந்தைகளையும் மீட்க தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.