மொடர்னாவின் கொரோனா தடுப்பூசிக்கு கனேடிய சுகாதார நிறுவனம் ஒப்புதல்

ஒப்புதல் அளித்தது... மொடர்னாவின் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியை அங்கீகரித்து கனேடிய சுகாதார நிறுவனம் (ஹெல்த் கனடா) ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதையடுத்து மொடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசியை தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

மொடர்னா தடுப்பூசி நாளை மறுதினம் முதல் கனடாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மொடர்னா நிறுவனம் உறுவாக்கிய தடுப்பூசி 90 சதவீதத்திற்கு மேல் செயற்திறன் கொண்டது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஃபைசர் மற்றும் மொடர்னா என 2 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த நாடு என்ற பட்டியலில் கனடா இணைந்துள்ளது.

ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.