சிபிஐ வைரவிழா கொண்டாட்டம்... பிரதமர் பங்கேற்றார்

புதுடெல்லி: வைரவிழா கொண்டாட்டம்... நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு ஏப்ரல் 1, 1963 இல் தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டங்கள் இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்தது.

வைர விழா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, பொதுமக்களுக்கு நம்பிக்கையும், வலிமையையும் சி.பி.ஐ. அமைப்பு வழங்கி உள்ளது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மக்கள் நிர்பந்திக்கிறார்கள்.

நீதியின் ஒரு தனிப்பெரும் பெயராக சி.பி.ஐ. உருவெடுத்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அதிக அளவில் ஊழல் செய்வதற்கான போட்டி இருந்தது. பெரிய பெரிய ஊழல்கள் நடந்தன. ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பயம் இல்லை. ஏனெனில் அமைப்பு அவர்களது பக்கம் இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு பின்பு, ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக நாங்கள் ஒரு நடவடிக்கையை எடுத்தோம். நீங்கள் நடவடிக்கை எடுக்க கூடிய நபர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என எனக்கு தெரியும்.