தமிழத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு ...

தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவானது. அதே வேளையில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

மேலும், தமிழகத்தில் 12 இடங்களில் மட்டும் 100 டிகிரி பாரான்ஹீட் எனும் அளவை தாண்டி கோடை வெப்பம் பதிவாகி இருந்தது.

இருந்தாலும், இக்கோடை வெப்பநிலை தாக்கத்தை தணிக்க தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.