கிளாட் நுழைவுத் தேர்வு வரும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று நடத்தப்பட உள்ளதாக தகவல்

இந்தியா: நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்காக கிளாட் நுழைவு தேர்வுள்ளது. 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களைத் தவிர இதன் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வின் மதிப்பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கைகளை நடத்தி கொண்டு வருகின்றன.

இதனை அடுத்து 2024 – 25ம் கல்வியாண்டுக்கான சட்டக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்காக டிசம்பர் 3ம் தேதி அன்று கிளாட் நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே இதற்கான விணணப்பங்கள் வருகிற நவம்பர் 3ம் தேதி வரை பெறப்படுவதாகவும், பொது பிரிவினருக்கு ரூபாய் 4000 மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 3500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும், https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு குறித்த மேலும் அதிக தகவல்களை 8047162020 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.