தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட்; கேரளா முதலமைச்சர் அதிரடி

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்வப்னா சமீபத்தில் பெங்களூரில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவனந்தபுரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை செய்தபோது 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர் என்பதும், இந்த கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனுக்கு நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா தேசிய புலனாய்வு ஆணையத்தின் அதிகாரிகளால் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் சந்தீப் என்பவரும் அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.