இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு திட்ட கேஸ் இணைப்புகள் முறைகேடாக பயன் படுத்தப்படுவதாக புகார்

சென்னை: இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதில் முறைகேடு ...தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டரை விநியோகம் செய்கின்றனர். அதில் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை உள்ள சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை உள்ள சிலிண்டருக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதையடுத்து அதில் வீட்டு சிலிண்டர் 918.50 ரூபாயாகவும், வணிக சிலிண்டர் ரூ. 1942 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமரின் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டு உள்ளன. அதில் தமிழகத்தில் 35 லட்சம் இணைப்புகள் உள்ளன. ஆனால் சில கிராமங்களில் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களில் பலர் இன்னும் சிலிண்டர் இல்லாமல் விறகு அடுப்பை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

மேலும் அது குறித்து விசாரணை செய்ததில் சில ஏஜென்சிகளே சிலிண்டர் முன்பதிவு செய்து, அந்த சிலிண்டரை உணவகம், கேட்டரிங் நடத்துவோருக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கேஸ் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு முறைகேடு செய்தவர்களுக்கு அபராதம் விதித்து இருப்பதும் என்பது குறிப்பிடத்தக்கது.