எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க புதிய முனையம் உருவாக்கம்

கொழும்பு: லிட்ரோ நிறுவன அதிகாரி தகவல்... , எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க சப்புகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க சப்புகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.