வேலூர் மாவட்டத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,510 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,976 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 51,633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,92,507 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும் இதுவரை 7,687 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,352 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 10,085 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 172 பேர் உயிரிழந்துள்ளனர்.