புதுச்சேரியிலும் கொரோனா... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... உலகம் முழுவதும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த வகை வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது இடங்களுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை கவலை அடைந்துள்ளது. எனவே புதுவையில் தினமும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டபோது, “பொதுமக்கள் முகமூடி அணிய வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். இன்றும் முதல் தினமும் 1,000 பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.