டெல்லியில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளுத்து வாங்கிய கனமழை

டெல்லி:நேற்று இரவும் பகலுமாய் பெய்த கனமழையால் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 153 மில்லி மீட்டர் மழைப்பதிவு ... மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிக கன மழை பெய்து கொண்டு வருகிறது. பொதுவாகவே, இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் அதிக கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது 2 மாதத்திற்கு முன்பாகவே பருவமழை துவங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் தவித்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, டெல்லியில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 153 மில்லி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லி முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் சாலைப் போக்குவரத்து பெரிதளவில் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், சரிவான பகுதிகளில் வசித்து வரும் மக்களை மேடான பகுதிகளுக்கு அழைத்து செல்வதில் நிவாரண குழுவினர் தொடர்ந்து பணியாற்றி கொண்டு வருகின்றனர். மேலும், கனமழையின் காரணத்தினால் டெல்லியில் பல பகுதிகளில் வீடு இடிந்ததாகவும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

மேலும் இது மட்டுமல்லாமல், டெல்லியை தொடர்ந்து காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலத்திற்கும் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிவாரண பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இரவும், பகலுமாக விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.