கொடுமணலில் நடந்த அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு... ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள தாழி, இதுவரை கிடைத்த தாழிகளை விட வித்தியாசமானது என கூறியுள்ள ஆய்வாளர்கள், டி.என்.ஏ. சோதனைக்காக தாழியை சென்னை எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஎன்ஏ சோதனையின் மூலம் தாழி எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பதை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

கொடுமணல் பகுதியில் இதற்கு முன் நடைபெற்ற அகழாய்வுகளில் பழங்கால கல்லறை அமைப்புகள், பாசி மணிகள், இரும்பை உருக்கும் அமைவிடம் மற்றும் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொடுமணல் பகுதியில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து, தமிழக அரசுக்கு பரிதுரைக்கப்படுள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.