ஹேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்... காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

ஆப்கானிஸ்தான்: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஹேரத் மாகாணத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. மக்கள் அலைபாய்ந்து வருகின்றனர்.

இதையடுத்து மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரம் அமைத்து காயமடைந்தவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் உலக சுகாதார மையம் போன்ற வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஓரளவு மருத்துவ உதவிகளை வழங்கியபோதும், சுகாதாரத்துறை ஊழியர்கள் பற்றாக்குறையால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.