மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட இருக்கிறது

சென்னை: தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசா வரையிலும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.72 வரையிலும் அதிகரித்தது.

அதன்பின் 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது மின்சார வாரியத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதன்படி கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு... தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு சிறிய தொகையாக ரூ.1 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவில், யூனிட் ஒன்றுக்கு ரூ.1.15 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில், யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து ரெயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 65 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயரழுத்த வணிகப் பிரிவு நுகர்வோர்களுக்கான, மின் கட்டணமானது யூனிட் ஒன்றுக்கு குறைந்த அளவாக 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தாமாக விட்டுக்கொடுக்கும் திட்டம் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் ''மின் மானியத்தை தாமாக விட்டுக்கொடுக்கும்'' திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகித பட்டியலில் மின்னேற்றம் செய்து கொள்வதற்கும், அதேபோல், வணிக நுகர்வோர்கள் அதே விகித பட்டியலில் பொது மின்னேற்றம் செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.