பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகம்: தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. கலை கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற தொடங்கியது.

இதை அடுத்து கடந்த ஜூன் 20ம் தேதி முதல் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே மாதிரி பொறியியல் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.எஸ்சி., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேர தகுதியுடையோர்கள் ஆவார்கள்.

மேலும் இவர்கள் விண்ணப்பிக்க ஜூலை 23ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் விண்ணப்பபதிவுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இன்று 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேர ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.