தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகம்: தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதற்கு இ டையே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து மிகவும் உயர்ந்துள்ளது. அதாவது, அணையின் நீர்வரத்து 5,700 கன அடியாக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், கே.ஆர்.பி அணையில் இருந்து 7,500 கன அடி நீர் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதாவது, கே.ஆர்.பி அணை மொத்தமாகவே 52 அடி உயரம் இருக்கிறது.

மேலும் இந்த அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டும் கூட 50 அடிக்கு நீர் இருக்கிறது. தற்போது வரைக்கும் இந்த அணை பகுதிகளில் கனமழை பெய்து கொண்டே வருவதால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடியே தான் இருந்து வருகிறது. இதனால், அந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

கே.ஆர்.பி அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே, இரண்டாவது நாளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தோடு சேர்ந்து தர்மபுரி, திருவண்ணாமலை மற்றம் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆற்றின் பகுதிக்கு யாரும் குளிக்கவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.