உணவுப்பொருட்களை வாங்க குவியும் மக்கள்; பற்றாக்கும் ஏற்படும் நிலை

உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை... மக்கள் திடீரென உணவுப் பொருட்களை வாங்க குவிந்து வருவதால் சந்தையில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்க செயலாளர் ஜி.எஸ். நாதன் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் விற்கப் பட வேண்டிய உணவுப் பொருட்கள் கடந்த வாரம் ஒரு நாளில் விற்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், அரிசி தவிர அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று எண்ணி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பல வாரங்கள் தாக்குப்பிடிக்கும் வகையில் வாங்கி செல்கின்றனர். இதனால் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.