பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை

இஸ்லாமாபாத்: 5 ஆண்டுகள் தடை... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தோஷக்கானா வழக்கில் 3ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான்கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இன்று இம்ரான் கானின் மனுவை விசாரிக்க உள்ளது.பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்திலும் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்யக் கோரி இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.