முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து ... கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு .... திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதனை அடுத்து அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைச்சாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பலங்களும் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

70-வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.