குஜராத் தேர்தல்... குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எண்ணிக்கை

குஜராத்: என்னப்பா இது என்பது போல் குஜராத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.


குஜராத்தில் 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாஜக ஆளும் குஜராத்தில் இம்முறை ஆளும் பாஜக காங்கிரஸ் மற்றும் கெஜ்ரிவாலின் ஆம் கட்சிக்கு போட்டியாக உள்ளது.

ஆத்மி கட்சி. இந்த தேர்தலில் 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்க உள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மொத்தமுள்ள 1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள்.

இதில், முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளில் 167 வேட்பாளர்களும், 2ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் 163 வேட்பாளர்களும் போட்டியிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் குற்ற வழக்குகளில் சிக்கிய 238 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.