வருகிற டிச.20 & 21ம் தேதி தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை

சென்னை: 10 மாவட்டங்களில் கனமழை ... தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதல் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நீரின் வரத்து அதிகரித்து வந்தது. எனவே, நீர் நிலைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் செய்யபட்டது.

அதிலும் குறிப்பாக, விளை நிலங்களில் நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தது.இந்நிலையில், தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளை மற்றும் டிசம்பர் 20 தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று டிசம்பர் 21ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும், டிசம்பர் 22ம் தேதி கடலூர்,

இதனை அடுத்து விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.