சென்னையில் பல இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை

சென்னை: பல இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை .... அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.

இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் அறிவித்திருந்தது.

எனவே அதன்படி சென்னையில்ம் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, மாம்பழம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், புரசைவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும் சென்னையை மாநகர் மட்டுமல்லாது சென்னை புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், அயப்பாக்கம், அண்ணனூர், ஆவடி உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இடி ,மின்னலுடன் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்க்கிறது.

இதனை அடுத்து இன்று காலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.