இன்று இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்குமாம்

சென்னை: மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ... வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஹாமூன் புயல் நேற்று தீவிர புயலாக வலுவிழந்து இன்று காலை கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக இன்று (அக்.25) முதல் அக்டோபர் 28 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


அதிலும் குறிப்பாக அக்டோபர் 29ஆம் தேதி புதுக்கோட்டை, அரியலூர், சிவகங்கை, பெரம்பலூர், விழுப்புரம் மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை செய்யக்கூடும்.

இதையடுத்து சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் கவும் இருக்க கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.