தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதாவது:-

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழை தொடரும்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எட்டு இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. கொள்ளிடம் 36செ.மீ., சிதம்பரம் 34செ.மீ., பரங்கிப்பேட்டை 26செ.மீ., மணல்மேடு, குறிஞ்சிப்பாடியில் தலா 25செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 22செ.மீ., சீர்காழி, குடவாசலில் தலா 21செ.மீ., ராமேஸ்வரத்தில் 20செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

பேராபூரணி, மஞ்சளாறு, புவனகிரி, மயிலாடுதுறையில் தலா 19செ.மீ., கறம்பக்குடி, பட்டுக்கோட்டையில் தலா 17செ.மீ., மதுக்கூரில் 16செ.மீ., ஸ்ரீமுஷ்ணத்தில் 15செ.மீ. மழை பதிவாகி உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.