வீட்டு மின் கட்டணம் ரூ.2.8 லட்சம்; போர்க்கொடி தூக்கிய பாடகி ஆஷா போன்ஸ்லே

என்னது வீட்டு மின் கட்டணம் ரூ.2.8 லட்சமா என்று அதிர்ந்து போய் உள்ளார் பின்னணி பாடகி ஆஷாபோன்ஸ்லே.

பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகியான ஆஷாபோன்ஸ்லே. இவரது வீடு ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் உள்ளது.

இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் கட்டணத்தை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பியுள்ளது. இதனால் பாடகி ஆஷா போன்ஸ்லே அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த வீட்டிற்கான ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 மற்றும் மே மாத மின் கட்டணம் ரூ.8,855.44 என வந்து கொண்டிருக்கும் போது ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும் என கேட்டுள்ளார்.

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாடகி ஆஷா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.