ஆதாரை இன்னும் அப்டேட் செய்யவில்லையா உடனே பண்ணுங்கள்

இந்தியா: மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி அனைவரும் தங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம் ... மத்திய அரசு சமீபத்தில் அனைத்து மக்களுக்கும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. எனவே அதன்படி ஆதார் கார்டு எடுத்து 10 வருடங்களுக்கு மேலாகியுள்ள மக்கள் அனைவரும் தங்கள் சமீபத்திய விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

குழந்தை பருவத்து புகைப்படங்களை மாற்றுதல், முகவரி, தொலைபேசி எண், திருமண நிலை போன்ற அனைத்து வித தகவல்களையும் மக்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மேலும் இவற்றை இலவசமாக அப்டேட் செய்வதற்கு குறிப்பிட்ட தேதி வரை முன்னதாக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மக்களின் கோரிக்கையை தொடர்ந்து வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் ஆன்லைனில் இலவசமாக ஆதார் கார்டினை அப்டேட் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது.


ஆதார் புதுப்பிப்பு முறை:

ஆதார் அதிகாரப்பூர்வ யூஐடிஏஐ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து ஓடிபி உள்ளிட வேண்டும்.
பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரி ஆகிய அப்டேட்களை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது ஆதார் ஆன்லைன் என்பதை தேர்வு செய்து உங்கள் புதுப்பிக்க வேண்டிய விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதையடுத்து இதற்கான ஆவணத்தை பதிவேற்றியவுடன் எஸ் ஆர் என் உருவாக்கப்பட்டு உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்.
இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்கு பின்னர் அரசு இ சேவை மையத்திற்கு சென்று ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.