வாட்ஸ் அப் ... புதிய அம்சம் குறித்த தகவல்

இந்தியா: மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி தான் உலகின் அதிக மக்கள் பயன்படுத்தும் செய்திகள் பகிர்வு தளமாக உள்ளது. இதனை அடுத்து இதில், பயனர்களின் வசதியினை மேம்படுத்தும் வகையில் அடிக்கடி பல்வேறு புதிய அம்சங்கள் அப்டேட் ஆக வெளியிடப்படும்.

இதில், பயனர்களின் பயன்பாட்டு அனுபவம் சிறப்பானதாக இருப்பதாக பாராட்டுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதில், தற்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் பற்றிய புதிய அம்சம் ஒன்று வெளியாக உள்ளது.

எனவே அதன்படி, டெஸ்க்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிக்க புதிய Option வழங்கப்படுகிறது. ஸ்டேட்டஸ் வழக்கம் போல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் தான் செயல்படும் என்ற போதிலும், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை விதிகளையும், மற்றவர்களுக்கு இடையூறாக உள்ளவற்றையும் கண்காணிக்க இப்புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விரைவில் இதற்கான சோதனை முறை முடிந்து அனைவருக்கும் இந்த அம்சம் அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.