கொரோனா பரவல் அதிகரிப்பால் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரிப்பு... நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்வரும் நாட்கள் மிகவும் அவதானமானவை என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது: “கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில், பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்கள் சில செயலிழந்து காணப்படுகின்றன. குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்களை மீண்டும் செயற்படுத்துவதற்காக சீன விசேட வல்லுனர்கள் இன்று மீண்டும் இலங்கை வரவுள்ளனர்.

மேலும், தனிமைப்படுத்தல் என்பது சிறை வாழ்க்கை அல்ல. அது இந்த சமூகத்தின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் ஒரு விசேட செயன்முறை என்பதை அனைவரும் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.