லியோ படத்தின் ரன்னிங் டைம் 2.43 மணி நேரம் என்று தகவல்

சென்னை: லியோ படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்து இருக்கிறது. இந்த படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாக உள்ள லியோ படம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. ரிலீசுக்கு முன்பே இப்படம் உலகளவில் ரூ.434 கோடி வரை இதுவரை வசூல் செய்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் லியோ படத்திற்காக தான் காத்திருக்கின்றனர். வரும் அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ட்ரெய்லர் வரும் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

சன் டிவி youtube சேனலில் லியோ ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் லியோ படத்தின் ரன் வெளிவந்து இருக்கிறது. படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.